ஒரு அப்பாவும், 4 வயது மகனும்


ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள்

அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான்.
சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார்.

அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.

வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்.

"பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன்,

கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார்.

கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்

” ஐ லவ் யூ அப்பா”.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?





Comments

Popular posts from this blog

இணையம்

சமூகம்

மகாத்மா காந்தி