இணையம்
உலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி இணையம் ( Internet ) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பறிமாற்றம் ( பாக்கெட் சுவிட்சிங் ) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும் , ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புண்ட கட்டுரைகள் , எழுத்துக்கள் , ஆவணங்கள் , படங்கள் , பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக , கல்வி நிறுவன , தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. மின்னஞ்சல் , இணைய உரையாடல் , காணொளி பார்த்தல் , விளையாட்டு , மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு மீயிணைப்புகள் மூலம் உலவல் வழி தொடர்புபடுத்தப்பட்ட இணையத்தளங்கள் முதலிய சேவைகளையும் , உலகளாவிய வலையின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது. ப...
Comments
Post a Comment